டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக கடும் அமளி 

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm

DIN

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கேராளாவில் தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு சீசனுக்காக தற்போது நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான புதனன்று இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் பாஜகவினரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட கெடுபிடிகளை அகற்றும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று கோஷமிட்டுக் கொண்டு, கையில் பேனர்கள், மற்றும் அட்டைகள் ஏந்தியவாறு அவையில் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 
 
இரண்டாவது நாளாக வியாழனன்றும் கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. சபரிமலை விவகாரம் குறித்து பேரவையில் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அவை துவங்கியதும் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்ற  உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர். அத்துடன் அது தொடர்பான பதாகைகளையும் கைகளில் எந்தியிருந்தனர்.  

ஆனால் உறுப்பினர்களின் அந்த கோரிக்கை ஏற்கப்படாததால் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.