அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு முதல்வர் வேண்டுகோள் 

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

News image
Updated On :3 அக்டோபர் 2018, 2:52 pm

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம்  பெய்த கனமழையால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் சின்னாபின்னமாகிப் போனது.  மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது.  கனமழையால் உண்டான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மழை வெள்ள பாதிப்பில் இருந்து  கேரளா தற்போதுதான் இயல்பு நிலைகுத்த திரும்பி வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மலைப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் கேரளாவில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கடும் மழை அபாயத்தின் காரணமாக  ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:

கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம். 

கன மழை காரணமாக உண்டாகும் எல்லா விதமான நெருக்கடிகயும் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

6,7,8 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்கள் 5-ம் தேதி தேதிக்குள் கரைக்கு திரும்பி விட வேண்டாம். 

மீட்பு பணிகளை விரிவாக மேற்கொள்ள உதவி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.