வங்கிகளில் ஊழல்: இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடு 

வங்கிகளில் ஊழல்: இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடு 

நாட்டின்  பொதுத்துறை வங்கிகளில் ஊழலில் ஈடுபட்ட இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

புது தில்லி: நாட்டின்  பொதுத்துறை வங்கிகளில் ஊழலில் ஈடுபட்ட இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

நாட்டிலுள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் தங்களது வணிக நோக்கத்திற்காக கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின்  பொதுத்துறை வங்கிகளில் ஊழலில் ஈடுபட்ட இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவனரான டி.எம்.பூஷன் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

13 துறைகளை சேர்ந்த 100 நிறுவனங்களின் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

இந்தப்பட்டியலானது உரிய விசாரணை முகமைகளிடம் மேல் நடவடிக்கைக்காக  அளிக்கப்படும் என்று தெரிகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com