அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவில் பாயும் யர்லங் சங்பு நதி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. இதனால், வடகிழக்கு மாநிலங்களுக்கு வெள்ள அபாயம் இல்லை என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திரா நதி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உற்பத்தியாகிறது. அங்கு, யர்லங் சங்பு என்ற பெயரில் அந்த நதி அழைக்கப்படுகிறது. பின்னர், அருணாசலப் பிரதேசத்தை வந்தடைந்த பிறகு சியாங் நதி என்றழைக்கப்படுகிறது. அங்கிருந்து அந்த நதி, அஸ்ஸாமை வந்தடைகிறது.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் திபெத் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதில், யர்லங் சங்பு நதி தடுக்கப்பட்டு, அருகில் செயற்கை ஏரி உருவானது. அதைத் தொடர்ந்து, சியாங் நதி, பிரம்மபுத்திரா நதி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உருவானது. இதனால், அருணாசலப் பிரதேம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சியாங், பிரம்மபுத்திரா நதியின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், யர்லங் சங்பு நதி இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்யிங், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறினார். மேலும், நிலச்சரிவு மற்றும் வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் இந்தியாவுக்கு தகவல் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

