கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேணுகோபால் எம்.பி. ஆகியோர் மீது சரிதா நாயர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று அவர்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மகளிர் காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் எவரையும் காங்கிரஸ் பாதுகாக்கப்போவதில்லை. தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புகாரளிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அதுகுறித்து விசாரிக்க காவல்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. அது உம்மன் சாண்டியாகவோ, அல்லது வேறு யாராகவுமோ இருந்தாலும் மாற்றுக் கருத்து இல்லை என்று சுஷ்மிதா தேவி கூறினார்.
சூரிய மின்தகடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சரிதா நாயர் அளித்துள்ள புகாரின் பேரில், உம்மன் சாண்டி, வேணுகோபால் மீது கேரள காவல்துறையின் குற்றப் பிரிவு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இருவர் மீதான வழக்கு தொடர்பாக விசாரிக்க, காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கரீம் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இயக்குநர் லோக்நாத் பெஹரா கூறியுள்ளார்.
எனினும், அரசியல் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், இந்த வழக்குப் பதிவின் மூலமாக, சபரிமலை விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப கேரள அரசு முயற்சிப்பதாகவும் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
முன்னதாக சரிதா நாயர் தனது புகாரில், கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான உம்மன் சாண்டி அரசு பங்களாவில் வைத்தும், எம்.பி. வேணுகோபால் மாநில அமைச்சரான ஏ.பி. அனில் குமார் இல்லத்தில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!

திமுக கொலை மிரட்டல்! ஆதவ் அர்ஜூனா வேண்டுகோள்! | VCK | Vijay

”முன்னேற்றத்திற்கான அரசு அமையும்!” பியூஷ் கோயல் பேட்டி NDA | ADMK
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


