கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கப்பலில் செல்ஃபி: மன்னிப்பு கேட்டார் முதல்வரின் மனைவி

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா பட்னவீஸ், கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று செல்ஃபி எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை

Updated On :22 அக்டோபர் 2018, 8:15 pm


மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அம்ருதா பட்னவீஸ், கப்பலின் ஆபத்தான பகுதியில் நின்று செல்ஃபி எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த செயலுக்காக அம்ருதா தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
அங்கிரியா என்னும் மும்பை-கோவா இடையேயான முதல் உள்நாட்டு போக்குவரத்து சொகுசு கப்பலின் முதல் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில முதல்வர் பட்னவீஸ் ஆகியோர் மும்பை கடல் பகுதியில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சியில் முதல்வரின் மனைவி அம்ருதா பட்னவீஸும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பிறகு கப்பலின் பல இடங்களிலும் நின்று செல்ஃபி எடுத்த அவர், கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனது இந்த செயல் குறித்து அம்ருதா செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த விளக்கத்தில், நான் செல்ஃபி எடுத்த இடம் ஆபத்தானது இல்லை. நான் பாதுகாப்பான இடத்தில் இருந்துதான் எடுத்தேன். நான் தவறு செய்து விட்டதாக யாரேனும் நினைத்தால், அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
மேலும், செல்ஃபி எடுப்பதற்காக எவ்வித காரியத்தையும் துணிந்து செய்யக் கூடாது என இளைஞர்களுக்கு கூற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.