கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மிஸோரம்: மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா

சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மிúஸாரமில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ திங்கள்கிழமை பதவி விலகினார். இது, அந்த கட்சிக்கு பின்னடைவாக

Updated On :22 அக்டோபர் 2018, 8:15 pm


சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொண்டுள்ள மிúஸாரமில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ திங்கள்கிழமை பதவி விலகினார். இது, அந்த கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
40 உறுப்பினர்களைக் கொண்ட மிúஸாரம் சட்டப் பேரவைக்கு, நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், மிúஸாரமில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே, இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு உள்ளது.
இந்நிலையில், அக்கட்சி எம்எல்ஏ ஹிமிங்டாய்லோவா கியாங்டி, தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். பேரவைத் தலைவர் ஹிபேயைச் சந்தித்து, அவர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். தனது முடிவுக்கான காரணத்தை செவ்வாய்க்கிழமை அறிவிப்பதாக கியாங்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநில உள்துறை அமைச்சராக இருந்தவரும், முதல்வர் லால் தான்ஹாவ்லாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவருமான ஆர்.லால்ஜிரிலியானா, கடந்த மாதம் 14-ஆம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். 
பின்னர், காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகிய அவர், எதிர்க்கட்சியான மிúஸா தேசிய முன்னணியில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த லால்ரின்லியானா சைலோ, கடந்த 3-ஆம் தேதி எம்எல்ஏ பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகினார். அவரும் மிúஸா தேசிய முன்னணியில் இணைந்தார். இவர்கள் இருவரும் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் ஆவர். 
இதேபோல், புத்தா தான் சக்மா என்ற எம்எல்ஏவும், காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.
இந்த சூழலில், மேலும் ஒரு எம்எல்ஏ பதவி விலகியிருப்பது, காங்கிரஸுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதன் மூலம் சட்டப் பேரவையில் காங்கிரஸின் பலம் 30-ஆக குறைந்துள்ளது. 6 எம்எல்ஏக்களைக் கொண்ட மிúஸா தேசிய முன்னணி, பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.