பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை:  பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்  

இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்  பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2018, 2:24 pm

DIN

புது தில்லி: இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்  பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட சுந்தர்பனி எல்லைப்பகுதி வழியாக கடந்த 21–ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது அவர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இதில் ஊடுருவல்காரர்கள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.  

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்  பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது. அத்துடன் பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்துக் கொண்டு அமைதியை விரும்புவதாக பொய் கூறி இந்தியாவை ஏமாற்றி வரும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தங்கள் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தானுக்கு எச்சரிகை விடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.