பெங்களூரு: எவ்வளவு நாட்கள் பதவியில் இருப்பேன் என்பதைப் பற்றிக் கவலையில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்த போதிலும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பதவி விலகியது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்குவதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகும்.
இந்நிலையில் எவ்வளவு நாட்கள் பதவியில் இருப்பேன் என்பதைப் பற்றிக் கவலையில்லை என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி கூறியதாவது:
முதல்வர் பதவியில் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்பதை பற்றி தான் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதிய தளத்தை கர்நாடகா வழங்கும். புதிய அரசியல் மாற்றம் கண்டிப்பாக இங்கிருந்துதான் ஏற்படும்.
முதல்வராக இருப்பது கடவுள் எனக்கு கொடுத்த பாக்கியம். இந்த பொறுப்பை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.