கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கோவா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர், அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். கோவா மின்சாரத் துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் பிரான்சிஸ் டி சோஸாவும் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கடந்த மாதம் சென்றார்.
இதை சுட்டிக்காட்டி, கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பனாஜியில் அக்கட்சியின் கோவா மாநில செய்தித் தொடர்பாளர் ராமாகாந்த் கலாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிகிச்சை காரணங்களுக்காக, தொடர்ந்து கோவாவில் பாரிக்கர் இருப்பதில்லை. தன்னுடைய முதல்வர் பதவி பொறுப்பையும் யாரிடமும் அவர் அளிக்கவில்லை. இதேபோல், கோவா மின்சாரத் துறை அமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரிக்கரும், இந்த 2 அமைச்சர்களும் எப்போது பணிக்குத் திரும்புவார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே, கோவாவில் அரசியலமைப்பு ரீதியில் சிக்கல் நேரிட்டுள்ளது. மாநிலம் தொடர்பான பணியை செய்வது தொடர்பாக பாரிக்கர், 2 அமைச்சர்கள் ஆகியோர் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறிவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்டு, பணியை செய்ய முடியவில்லையெனில், அதுவே பதவி பிரமாணத்தை மீறும் செயலாகும். இது அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாமல் தோல்வியடைய வைப்பதற்கு இணையான செயலாகும்.
ஆதலால் கோவாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த எங்களது கட்சி வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை நேரில் சந்தித்து வலியுறுத்த, கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் நேரம் ஒதுக்கி தரும்படி காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. பாரிக்கரால் தற்காலிகமாக பணியாற்ற முடியாது என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. ஆனால் 24 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்ற முடியாத பட்சத்தில், தனது பொறுப்பை வேறு யாரிடத்திலும் வழங்குவதுதான் சரியாகும். கோவாவில் தற்போது அரசு என்ற ஒன்றே இல்லை என்றார் ராமாகாந்த் கலாப்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

