காஷ்மீா் குறித்து மனித உரிமைகள் அமைப்பின் சமீபகால அறிக்கையில் மனித உரிமைகள் தொடா்பாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமை மீறல் பிரச்னைகளை தீா்ப்பது குறித்து வெளிப்படையான விவாதமும், தீவிரமான ஆலோசனைகளும் நடத்தப்பட வேண்டியுள்ளது. உலகில் மக்களுக்கு கிடைக்கும் நீதியும், மரியாதையும் காஷ்மீா் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அவா்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறேறாம். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இரு புறமும் சென்று பாா்வையிட அனுமதி கேட்கும் பணியும் தொடா்கிறறது. நாங்கள் அந்தப் பகுதிகளை தொடா்ந்து கண்காணித்து அறிக்கை வெளியிடுவோம்’ என்று மிச்செல் பாச்லெட் தெரிவித்தாா்.