பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

செர்பியா உள்ளிட்ட 3 நாடுகளில் வெங்கய்ய நாயுடு இன்று முதல் பயணம்

செர்பியா உள்ளிட்ட 3 மத்திய ஐரோப்பிய நாடுகளில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை (செப். 14) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST


செர்பியா உள்ளிட்ட 3 மத்திய ஐரோப்பிய நாடுகளில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை (செப். 14) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தின் முதல்கட்டமாக, செர்பியாவுக்கு வெள்ளிக்கிழமை வெங்கய்ய நாயுடு செல்கிறார். அந்நாட்டில் 16ஆம் தேதி வரை வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்த பயணத்தின்போது, செர்பியா அதிபர், பிரதமர், தேசிய சபை தலைவர் ஆகியோரை வெங்கய்ய நாயுடு சந்தித்து பேசுகிறார். செர்பியா தேசிய சபை கூட்டத்திலும் வெங்கய்ய நாயுடு உரை நிகழ்த்தவுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மால்டா நாட்டுக்கு வரும் 16ஆம் தேதி அவர் புறப்பட்டு செல்கிறார். அந்நாட்டில் 18ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் வெங்கய்ய நாயுடு, அதிபர், பிரதமர், பிரதிநிதிகள் சபை தலைவர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
மால்டாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களுடன் கலந்துரையாடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இதன்பின்னர், ரூமேனியா நாட்டில் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது ரூமேனியா அதிபர், பிரதமர், செனட் சபை தலைவர் ஆகியோரை அவர் சந்தித்து பேசவுள்ளார்.
செர்பியா, மால்டா, ரூமேனியா ஆகிய 3 நாடுகளிலும் வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் செய்யும்போது, அந்நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.
மேற்கண்ட 3 நாடுகளிலும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுடன், மத்திய நிதி இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா, மாநிலங்களவை எம்.பி.க்கள் பிரசன்னா ஆச்சார்யா, விஜிலா சத்தியானந்த், சரோஜ் பாண்டே, மக்களவை எம்.பி.க்கள் ராகவ் லகன்பால் ஆகியோர் அடங்கிய குழுவும் சுற்றுப்பயணம் செல்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.