செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்!: சிபிஐ விளக்கம்

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவருக்கு எதிராக கண்காணிப்பு நோட்டீஸ்கள் (லுக் அவுட் சர்குலர்) பிறப்பிக்கப்பட்ட விவகாரம் 

Published On :


தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவருக்கு எதிராக கண்காணிப்பு நோட்டீஸ்கள் (லுக் அவுட் சர்குலர்) பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விளக்கமளித்துள்ளது. அந்தத் தருணத்தில் தவறான சில முடிவுகளை எடுத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
இந்த வழக்கு விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக, விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார்.
மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன்பாக அவருக்கு எதிராக சில லுக் அவுட் சர்குலர்களை சிபிஐ பிறப்பித்தது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றால் அவரைக் கைது செய்யுமாறு சம்பந்தப்பட்ட காவல் அமைப்புகளுக்கு அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதை கடுமையாக பின்பற்றுமாறு சிபிஐ அறிவுறுத்தவில்லை எனத் தெரிகிறது. மல்லையாவை கைது செய்ய வேண்டாம் என்றும், அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதுமானது என்றும் அந்த அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 2-இல் தப்பிச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிஐ அமைப்பின் லுக் அவுட் சர்க்குலர் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதுதொடர்பாக அவ்வப்போது விளக்கங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், சிபிஐ வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறியதாவது:
மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவேஅவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, வழக்குப் பதிவு செய்ததைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மல்லையாவுக்கு எதிராக மத்திய பாஜக அரசோ, சிபிஐ அமைப்போ மேற்கொள்ளவில்லை' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.