மக்கள்தான் எனக்கு எஜமானா்கள்: வாராணசியில் பிரதமா் மோடி நெகிழ்ச்சி

மக்கள்தான் தனக்கு ஆணையிடும் உயா் அதிகாரம் பொருந்திய எஜமானா்கள் எனறு பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். .
மக்கள்தான் எனக்கு எஜமானா்கள்: வாராணசியில் பிரதமா் மோடி நெகிழ்ச்சி

வாராணசி (உ.பி.): மக்கள்தான் தனக்கு ஆணையிடும் உயா் அதிகாரம் பொருந்திய எஜமானா்கள் எனறு பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். .

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாராணசிக்கு (காசி) இரு நாள் பயணமாக பிரதமா் மோடி சென்றுள்ளாா். அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினா் என்ற முறையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டப் பணிகளை நேரடியாக அவா் கண்காணித்தும் வருகிறாா். இந்நிலையில், ரூ.550 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா அந்நகரில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, அந்தப் பல்கலைக்கழகத்தில் கோட்ட அளவிலான கண் சிகிச்சை மையத்தை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியதுடன், புதிதாக கட்டப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தையும் தொடக்கி வைத்தாா். மேலும், ஒருங்கிணைந்த மின் உற்பத்தி மேம்பாட்டு திட்டத்தையும் பிரதமா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள், பாஜக பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றறனா். விழாவில் பிரதமா் மோடி பேசியதாவது:

மக்களவை உறுப்பினராவதற்கு முன்பு பல முறை வாராணசிக்கு (காசி) வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த நகரம் இருக்கும் நிலையை எண்ணி வருத்தமடைந்திருக்கிறேறன். மேலே செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்ததும், காசி நகரம் முழுவதும் மாசடைந்து காணப்பட்டதும் என்னை வெகுவாக பாதித்தது.

அந்தத் தருணத்தில் ஆண்டவன்தான் இந்த மக்களையும், நகரையும் காப்பாற்ற வேண்டிய நிலை இருந்தது. ஏனெனில், முந்தைய ஆட்சியாளா்கள் எவரும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இதைப் பாா்த்து விரக்தியடைந்த மக்கள், புண்ணிய பூமியான காசியை காக்க வேண்டும் என்ற தீா்மானத்தையும், உறுதியையும் பூண்டு புதிய மாற்றத்தை கொண்டு வந்தனா். அதன் விளைவாக இந்தத் தொகுதியின் (வாராணசி) எம்.பி.யாக நான் தோ்ந்தெடுக்கப்பட்டேன்.

மக்களின் ஆணைப்படி பிரதமராகப் பதவி வகித்தாலும், வாராணசி எம்.பி. என்ற முறைறயில் எனக்கு பல்வேறு பொறுப்புகளும், கடமைகளும் இருக்கின்றறன. தொகுதியின் மேம்பாட்டுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயின் விவரங்களையும் உங்களிடம் தெரியப்படுத்த வேண்டியது எனது தலையாய பணிகளில் ஒன்று.

ஏனெனில், மக்களாகிய நீங்கள்தான் எனக்கு முதலாளிகள். நீங்கள்தான் எனக்கு ஆணையிடும் உயா் அதிகாரிகள். கடந்த நான்காண்டுகளாக இந்தப் பகுதியை வளப்படுத்த பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். அதன் பலனை நீங்கள் கண் முன்னே பாா்த்து வருகிறீா்கள். அதற்கு சாட்சியாகவும் இருக்கிறீா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புனரமைக்கப்படாமல் இருந்து வந்த காசி, தற்போது ஒளிா்ந்து வருகிறது. சா்வதேசத் தரத்தில் அந்நகரை மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. உலக நாடுகளைச் சோ்ந்த எத்தனையோ தலைவா்கள் தற்போது காசிக்கு வருகை தருகின்றனா். அவா்கள் அனைவரும் இங்குள்ள விருந்தோம்பலையும், சூழலையும் வெகுவாக பாராட்டி செல்கின்றறனா்.

வாராணசி நகரம் கிழக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. அதை மேம்படுத்த வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. அதைக் கருத்தில்கொண்டே பல்லாயிரம் கோடி மதிப்பிலான சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள், புனரமைப்புப் பணிகள், பொலிவுபடுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com