பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: ரெட் அலர்ட்

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால், இம்மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுத்துள்து.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: ரெட் அலர்ட்
Updated on
1 min read


சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால், இம்மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுத்துள்து.

நெற்பயிர்களும், பருத்திச் செடிகளும் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பெய்த கன மழை காரணமாக வேளாண் பொருட்கள் அனைத்துமே வெள்ளத்தில் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மிதமானது முதல் கன மழை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளும், ஹரியானாவில் யமுனா நதியிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து கடுமையாக உயர்ந்துள்ளது. 

இது பருவம் தவறிய மழை என்றும், அறுவடை நேரத்தில் பெய்திருக்கும் கன மழை காரணமாக வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com