ராகுலுடனான கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதுதான்; தனிப்பட்டது அல்ல : ராஜ்நாத்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ராகுலுடனான கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதுதான்; தனிப்பட்டது அல்ல : ராஜ்நாத்
Updated on
1 min read


லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னௌவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், பாஜக எப்போதும் மாற்று அரசியல் கருத்துகளையும், கொள்கைகளையும் மதிக்கவேச் செய்யும், எப்போதுமே அதனை தனிநபர் விஷயமாக எண்ணாது என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் திருக்கோயில் பயணங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ஒருவர் எப்போதுமே அரசியலை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், எல்லோருடனும், எல்லோரின் முன்னேற்றத்துக்காகவும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com