
அம்ரித்சர்: போலீஸ் ஜீப்பின் மேற்கூரையில் வைத்து அழைத்து வரப்பட்ட இளம்பெண் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த கொடூர சம்பவம பஞ்சாப்பில் நிகழ்ந்துள்ளது
பஞ்சாபின் அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ளது சவிந்தா தேவி பகுதி. இங்கு சொத்துத் தகராறு தொடர்பான விசாரணைக்காக ஒரு வீட்டிற்கு பஞ்சாப் போலீசார் சென்றுள்ளனர். தொடர்புடைய நபர் இல்லாத காரணத்தால், அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இதற்கு அந்த நபரின் மனைவி கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோபமடைந்த போலீசார் அந்த பெண்ணிற்கு தண்டனை வழங்கும் பொருட்டு அவரை போலீஸ் ஜீப்பின் மேற்கூரையில் கட்டி வைத்து, அந்தப் பகுதியினை வலம் வருவது என்று தீர்மானித்தனர். அப்படி அவர்கள் செய்த பொழுது ஒரு திருப்பத்தில் வாகனம் வேகமாகத் திரும்பும் சமயம், அந்தப் பெண் கூரையில் இருந்து தவறிக் கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்த அவர் தட்டுத் தடுமாறி எழுந்து ஓட முயற்சித்துள்ளார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் உதவி செய்து அவரை மருத்துவமையிவ் சேர்த்துள்ளனர். அவருக்குத் தலையிலும் மற்ற இடங்களிலும் கடுமையான காயம் பட்டுள்ளது.
பஞ்சாப் போலீஸின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.