கொல்கத்தா: உலக அளவில் புற்றுநோய் பாதித்து உயிரிழக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த குழந்தை முதல் 19 வயது சிறார்கள் வரையில் உலக அளவில் சுமார் 3 லட்சம் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது.
அதிக வருவாய் ஈட்டும் மக்களைக் கொண்ட நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் 80 சதவீதம் குணப்படுத்தப்படுகிறது. அதே சமயம் குறைந்த வருவாய் ஈட்டும் மக்களைக் கொண்ட நாடுகளில் 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே புற்றுநோய் சரி செய்யப்படுகிறது.
குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறிதல், தொடர் சிகிச்சைகளுக்கு உட்படுத்துவது, சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குணப்படுத்துவது, உரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்ற விஷயங்களில் தொய்வு ஏற்படுவதால், புற்றுநோயை குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதும், புற்றுநோய் சிகிச்சைகள் அனைத்தும் விலை அதிகமாக இருப்பதும் மரணத்துக்கான காரணங்களாக அமைகின்றன.
புற்றுநோய் என்பது உலகின் எந்த மூலையில் இருக்கும் யார் ஒருவருக்கும் எந்த உடல் பாகத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்த செல்கள் வளர்ந்து பெருகுவது புற்றுநோய் எனப்படுகிறது.
பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோயைப் போல, சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்குக் காரணங்கள் எதுவும் கண்டறியப்படுவதில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


