சுடச்சுட

  

  தீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

  By Raghavendran  |   Published on : 13th June 2018 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Deepika_Padukone_house_is_in_Mumbai_building_that_caught_fire

   

  மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள அப்பாசாஹேப் மராதே மார்க் எனுமிடத்தில் உள்ள பிரபாதேவி குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பியூமாண்டே டவர்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை மதியம்  2.08 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  குடியிருப்பின் 33-ஆவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் 10 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவசர தேவைக்காக ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  இங்குள்ள 95 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இதுவரை உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

   

   

  இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 26-ஆவது தளத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் வீடு அமைந்துள்ளது. சுமார் 2776 சதுரடி பரப்பளவில் 4 படுக்கையறை வசதி கொண்ட இந்த வீட்டை கடந்த 2010-ஆம் ஆண்டு தீபிகா வாங்கியுள்ளார். இந்த வீட்டை பிரபல வீடு வடிவமைப்பாளர் வினிதா சைதன்யாவைக் கொண்டு தீபிகா படுகோனே வடிவமைத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai