ஹிந்துயிஸம் அமைதியின் மறுவடிவம்: ஊர்மிளா மடோன்கர்

ஹிந்துயிஸம் அமைதியின் மறுவடிவமாகும் என்று நடிகையும், மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஊர்மிளா மடோன்கர் திங்கள்கிழமை தெரிவித்தார். 
ஹிந்துயிஸம் அமைதியின் மறுவடிவம்: ஊர்மிளா மடோன்கர்

ஹிந்துயிஸம் அமைதியின் மறுவடிவமாகும் என்று நடிகையும், மும்பை வடக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஊர்மிளா மடோன்கர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த நடிகை ஊர்மிளா மடோன்கர், அக்கட்சி சார்பில் மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தித் தொலைக்காட்சிக்கு ஊர்மிளா அண்மையில் அளித்த பேட்டியில், உலகிலேயே ஹிந்துயிஸம்தான் மிகவும் வன்முறை கொண்டது என கூறினார்.

இதுகுறித்து போவாய் காவல் நிலையத்தில், ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை ஊர்மிளாவின் கருத்து காயப்படுத்தியுள்ளது. எனவே அவர் மீதும், அதற்கு காரணமான காங்கிரஸ் தலைவர் ராகுல் மீதும், அந்த தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்,  நடிகையம், காங்கிரஸ் வேட்பாளருமான ஊர்மிளா மடோன்கர், தன் மீதான புகார் குறித்து கூறியதாவது:

என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, அது அடிப்படை முகாந்திரமில்லாத உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டாகும். பாஜக-வின் இனவாத அரசியல் குறித்து தான் நான் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தேன். ஹிந்துயிஸத்தை பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தேன். இதன்மூலம் மக்களை தவறான பாதைக்கு பாஜக அழைத்து செல்கிறது. 

ஹிந்துயிஸம் அமைதியின் மறுவடிவமாகும். எனக்கு ஹிந்துயிஸத்தின் மீது எனக்கு மரியாதையும், அன்பும், நம்பிக்கையும் உள்ளது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com