திருடுவதற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வரத்துடிக்கிறது: பிரதமர் மோடி

திருடுவதற்காகவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரத்துடிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 
திருடுவதற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வரத்துடிக்கிறது: பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

திருடுவதற்காகவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரத்துடிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக குஜராத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஊழல்வாதிகளால் நிறைந்தது. அவர்கள் திருடுவதற்காகத்தான் ஆட்சிக்கு வரத்துடிக்கின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகளில் புதுப்பது ஊழல்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் பிடிபடுகின்றனர். 

காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வளர்ச்சிக்காக ஏழை மக்களின் உழைப்பு திருடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்பிணிகளின் நலன்களையும் திருடியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் வீடுகளில் இருந்து மிகப்பெரிய சாக்குப்பைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததுதான்.

முதலில் கர்நாடகம், பின்னர் மத்தியப்பிரதேசம் என இவ்விரு மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி தனது பணத்தேவையை பூர்த்தி செய்துகொள்ள பயன்படுத்தி வருகிறது. இதே நிலை தான் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் தொடர்கிறது. எனவே காங்கிரஸ் ஆட்சியமைக்க நினைத்தால் நமது கைகளில் எதுவும் மிஞ்சியிருக்காது. 

சர்தார் வல்லபபாய் படேல் மற்றும் மொர்ராஜி தேசாய் போன்ற தேசத் தலைவர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஏனென்றால் அந்த தலைவர்களின் வளர்ச்சி நேரு குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுதான் அதற்கு முக்கிய காரணம். குறிப்பாக மொர்ராஜி தேசாய் அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரின் அரசும் 2 ஆண்டுகளில் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெறுப்பு பட்டியலில் அடுத்து இடம்பிடித்துள்ளது நான்தான். இந்நாட்டை ஒரு டீக்கடைக்காரர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டார் என்று என் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com