ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மேலும் 5 ஆண்டுகள் தாருங்கள் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி: பிரதமர் மோடி

இந்த 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 3:56 pm

இந்த 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் காங்கிரஸ் ஊழல்வாதிகள் சிறை செல்வது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நடப்பு ஆட்சியின் போது அனைத்து காங்கிரஸ் ஊழல்வாதிகளையும் சிறை வாசல் வரை வரவழைத்துவிட்டேன். எனவே மேலும் ஒரு 5 ஆண்டு ஆட்சிக்கு மீண்டும் வாய்ப்பளித்தால் அவர்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி. நமது ராணுவத்தை பலவீனப்படுத்துவது போன்ற போலியான வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இங்கு யார் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் பிணையில் வெளிய வருகின்றனர். 

அந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி மக்கள் பணத்தை திருடுவதற்காகவே மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தனி பிரதமரை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. பாஜக மட்டுமே அங்கு நாட்டின் பாதுகாப்புக்காக போராடி, பயங்கரவாதத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

முதல் தலைமுறை வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை நாட்டுக்கு அர்ப்பணியுங்கள். நாட்டின் பாதுகாப்பும், முன்னேற்றமும் தான் பாஜக அரசின் ஒரே குறிக்கோள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.