நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெரிவித்துள்ளதாவது:
இன்றைய சூழலில் மோடி அரசுக்கு எதிராக செய்தி வெளியிட அனைத்து ஊடகங்களும் தயங்குகின்றன. ஏனென்றால் நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது இந்திரா எமர்ஜென்சியை விட மிகவும் மோசமானது.
இந்திரா எமர்ஜென்சியின்போது அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்களை எதிர்த்த யாரையும் தேச விரோதிகளாக இந்திராவோ, காங்கிரஸ் கட்சியினரோ சித்தரித்தது கிடையாது. எந்த இடத்திலும் அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்படவில்லை. தலித்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. சாதி, மதத்தின் பெயரால் தலித்கள் கொல்லப்பட்டதும் கிடையாது.
பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் யாரும் கூட கொல்லப்பட்டதில்லை. ஆனால், தற்போது கேள்வி எழுப்பினால் பாகிஸ்தானுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இதன்பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா, வாக்காளர்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை. அந்த காலகட்டத்தில் மோடி, ஜேட்லி, வெங்கய்ய நாயுடு போன்ற பெயர்களே கேட்டது இல்லை என்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


