புது தில்லி: இந்திய ராணுவத்தை தேர்தல் பணிக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் செய்தியல்ல. வெறும் புரளி.
குடியரசுத் தலைவர் மாளிகையும் இது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், மக்களவைத் தேர்தல் பணிக்கு இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படையை பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதுபோன்ற எந்தவொரு கடிதமும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அதே போல, ராணுவ முன்னாள் அதிகாரிகளும், இதுபோன்றதொரு எந்தக் கடிதத்தையும் எங்கள் தரப்பில் இருந்து அனுப்பவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற முக்கிய அதிகாரிகள் 8 பேர் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக ஒரு கடிதம் இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து இரு தரப்பில் இருந்தும் மறுப்பு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மேலும், இந்த கடிதம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற எந்தவொரு கடிதமும் எழுதப்படவில்லை. அப்படி ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருக்கும் எந்த விஷயமும் ஏற்றுக் கொள்ள முடியாததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1 - 8 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண்: ஏப். 30-க்குள் பதிவேற்ற உத்தரவு

புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு - அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


