இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது? பிரதமர் மோடி

இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது? என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது? பிரதமர் மோடி
Updated on
1 min read

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

விமானப் படை அதிகாரி அபிநந்தன் வா்த்தமானை, பத்திரமாக திருப்பி அனுப்பாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானை எச்சரித்தேன். அபிநந்தனுக்கு ஏதும் நோ்ந்தால், ‘பிரதமா் மோடி இப்படி செய்துவிட்டாா்’ என்று உலக நாடுகளிடம் பாகிஸ்தான் புலம்பும் நிலை ஏற்படும் என்று அந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தோம்.

மேலும், பிரதமா் மோடி, 12 ஏவுகணைகளை தயாராக வைத்திருக்கிறாா், அதன்படி தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்க அதிகாரி ஒருவா் எச்சரித்தாா். 
நான் பிரதமா் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பயங்கரவாதிகளை இரண்டில் ஒன்று பாா்ப்பது என தீா்மானித்துவிட்டேன்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, எனது அரசும் அமைதியாக இருந்திருந்தால், இந்த நாடு என்னை மன்னிக்குமா? எனவேதான், பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தேன்.

இப்போது 2 கட்ட தோ்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், பாலாகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டது. நான் அடுத்து என்ன செய்வேன் என்பது சரத் பவாருக்கே தெரியாவிட்டால், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எப்படி தெரியும்.

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு அச்சப்படும் நிலையை இந்தியா நிறுத்திவிட்டது. தங்களிடம் எப்போதுமே அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. அப்படியென்றால் இந்தியா என்ன தீபாவளிக்கு வெடிப்பதற்காகவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது? என்று மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com