கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்ட விவகாரத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
நாடு முழுவதும் எழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் மூன்றாவது கட்டமாக 116 தொகுதிகளுக்கு செவ்வாயன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளும் அடக்கம்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடி அருகே கையெறி குண்டு வீசப்பட்ட விவகாரத்தால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டம் ராணிநகரில் உள்ள வாக்குச் சாவடி எண்கள் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. முகங்களை மறைத்துக் கொண்ட ஐந்து இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகில் கையெறி குண்டுகளை வீசுகின்றனர். அவை அனைத்தும் நாட்டு வெடிகுண்டுகளாகும், இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. இருந்த போதிலும் அங்கு தொடந்து பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


