யாசின் மாலிக் 'சுயமரியாதைக்காரர்': பி.சி.சாக்கோ புகழாரம்

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.
யாசின் மாலிக் 'சுயமரியாதைக்காரர்': பி.சி.சாக்கோ புகழாரம்

பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக் சிறந்த சுயமரியாதைக்காரர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரக்யா சிங் தாகூர் போன்ற குற்றவாளிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட முடியும் என்றால், பிரிவினை கோரும் யாசின் மாலிக்கை மத்திய அரசு எதற்காக துப்பாக்கி முனையில் கைது செய்ய வேண்டும். அதுபோன்ற சமயங்களில் அனைத்து சுயமரியாதைக்காரர்களும் யாசின் மாலிக் போன்றுதான் செயல்படுவார்கள். 

காங்கிரஸ் கட்சி என்றுமே யாசின் மாலிக்கின் சித்தாந்தங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆதரித்தது கிடையாது. ஆனால், அவர் போன்ற ஒருவர் வெளிப்படுத்திய வீரம் போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியது. ஏனென்றால் யாரை வேண்டுமானாலும் மிரட்டலாம் என்ற மத்திய அரசின் போக்கை அவர் தைரியமாக எதிர்த்துள்ளார். 

ஏனென்றால் இந்தியா ஜனநாயக நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவன் யாசின் மாலிக், மே மாதம் 24-ஆம் தேதி வரை பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளான். அவனுடைய இயக்கத்துக்கு மத்திய அரசால் அம்மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 1989-ஆம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் முஃப்தி முகமது சயீது மகள் ரூபையா சயீது கடத்தல் விவகாரம் தொடர்பாக 2 சிபிஐ வழக்குகள் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் 1990-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்களின் மரணம் தொடர்பான வழக்கும் யாசின் மாலிக் மீது உள்ளது குறிப்பிடடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com