பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா மரணம் 

பிகார் முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவால் திங்களன்று மரணமடைந்தார்.
பிகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா மரணம் 
Published on
Updated on
1 min read

பாட்னா: பிகார் முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவால் திங்களன்று மரணமடைந்தார்.

1970-களில் பிகார் மாநில காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஜெகந்நாத் மிஸ்ரா. அரசியலுக்கு வருவதற்கு முன்பாக இவர் பிகார் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணியாற்றினார். 

தீவிர அரசியலில் இறங்கிய பின்னர் பிகார் மாநில முதல்வராக 1975, 1980 மற்றும் 1989 ஆகிய மூன்று காலகட்டங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் செயல்பட்டார்.

வயதான பின்னர் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திங்களன்று மரணமடைந்தார். இவருக்கு  நிதிஷ் மிஸ்ரா என்றொரு மகன் இருக்கிறார்.

மிஸ்ராவின் மறைவுக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com