மொபைல் போனை அடமானம் வைத்து குழந்தைக்கு தடுப்பூசி வாங்கிய தந்தை! அரசு மருத்துவமனையின் அவல நிலை..

எங்களிடம் பணம் இல்லை என்ற காரணத்தினால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால், பிரபலமான, மக்கள் அதிகம் கூடும் இந்த மருத்துவமனையிலேயே மருந்து  இல்லை என்றால் என்னைப்போன்ற ஏழை மக்களின் நிலை என்னாவது?
மொபைல் போனை அடமானம் வைத்து குழந்தைக்கு தடுப்பூசி வாங்கிய தந்தை! அரசு மருத்துவமனையின் அவல நிலை..

ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர், தனது 3 வயது குழந்தையை நாய் கடித்த நிலையில், சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில், மருந்து இல்லை என்று கூறி அரசு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது.

இதனால், ஹரியானாவில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான ரோக்டாக்கிற்கு  குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து தற்போது இருப்பில் இல்லை என்று கூறி, வெளியே தனியார் மருத்துவமனையில் வாங்கி வரச்சொல்லியுள்ளார். குழந்தையின் தந்தையும் வேறு வழியின்றி, தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, நாய்கடிக்கான தடுப்பூசி மருந்து ரூ,4.500 என்று கூறியுள்ளனர். அவரிடம் ரூ.2,000 மட்டுமே இருந்தது. இதனால் தனது மொபைல் போனை அடமானம் வைத்து ரூ.2,500 பெற்று தடுப்பூசிக்கான மருந்தை வாங்கிச் சென்றுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, 'எங்களிடம் பணம் இல்லை என்ற காரணத்தினால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். ஆனால், பிரபலமான, மக்கள் அதிகம் கூடும் இந்த மருத்துவமனையிலேயே மருந்து  இல்லை என்றால் என்னைப்போன்ற ஏழை மக்களின் நிலை என்னாவது? அரசு இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com