பாஜக தேசியத் தலைவர் பதவிக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான இந்தத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதேசமயம், வாக்குச்சாவடி வாரியாக அக்டோபர் 10 முதல் அக்டோபர் 30 வரை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலப் பிரிவுக்கான தேர்தல்கள் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.
எங்கள் கட்சி உறுப்பினர்களைக் காட்டிலும், கூடுதல் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை வெறும் 8 மட்டுமே" என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2014 முதல் பாஜகவின் தேசியத் தலைவராக உள்ளார். கட்சியின் விதிப்படி, ஒரு தலைவர் இரண்டு பொறுப்புகளை வகிக்கக் கூடாது. இதனால், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


