மகாராஷ்டிரா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி?

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிரா ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 பேர் பலி?
Updated on
1 min read


ஷிர்புர்: மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரசாயன ஆலையில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும், விபத்து நேர்ந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலைக்குள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஷிர்புர் தாலுகா, வாகாடி கிராமத்தில் அமைந்திருந்த இந்த ரசாயன ஆலையில் காலை 9.45 மணிக்கு பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து ஆலைக்குள் இருந்த பல சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த விபத்தில் இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையும், மீட்புத் துறையினரும் கூறுகிறார்கள். தொடர்ந்து மீபுப் பணிகள் நடந்து வருகின்றன என்று ஷிர்புர் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com