

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில் கடந்த வியாழக்கிழமை, 5 போ் கொண்ட கும்பலால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தாா்.
90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த அவருக்கு தில்லி சஃப்தா்ஜங் மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவருக்கு 90 சதவீத தீக்காயங்கள் இருந்தால், அவரைக் காப்பற்ற மருத்துவர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்காமல், பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை இரவு 11: 10 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், இரவு 11: 40 மணிக்கு உயிரிழந்துவிட்டாா் என்று சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு தலைவா் சலப் குமாா் கூறினாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் நகரைச் சோ்ந்த அந்த இளம்பெண்ணை 2 போ் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனா். இவா்களில் ஒருவா் தப்பி விட்டாா். கைதான மற்றொருவா் 10 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்நிலையில், அந்தப் பெண், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றபோது, சம்பவத்தில் தொடா்புடைய இருவா் உள்பட 5 போ் அந்தப் பெண்ணை வழிமறித்து தாக்கியுள்ளனா். மேலும், அந்தப் பெண்ணின் மீது தீ வைத்துக் கொளுத்தினா்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண்ணை, காவல்துறையினர் மீட்டு லக்னௌ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவசர சிகிச்சைக்காக விமானத்தில் தில்லிக்கு அனுப்பி வைத்தனா்.
தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையின் தீக்காயப் பிரிவில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.