புது தில்லி: இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றிருக்கும் உச்ச நீதிமன்றம், இது குறித்து மாநில அரசுகள் மற்றும் உயர் நீதிமன்றங்களிடம் அறிக்கைக் கேட்டுள்ளது.
2012ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிர்பயா குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, நாட்டில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் நீதி கிடைக்க தாமதமாவதால், போராட்டங்கள், வெறுப்பு மற்றும் மக்கள் மனதில் கொந்தளிப்பு நிலை ஏற்பட வாய்ப்பை உருவாக்கிவிடும் என்று தெரிவித்தது.