மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜனவரி 8ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்களின் சம்மேளனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image

22_tni_bank_2210chn_65_2

Updated On :21 டிசம்பர் 2019, 5:39 am

DIN


பெங்களூரு: 2020ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இந்தியாவின் பெரும்பாலான வங்கி ஊழியர்களின் சங்கங்கள் தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்களின் சம்மேளனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளத்தின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில, ஊழியர்களின் நலனுக்கு எதிராக ஊழியர்கள் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது, பணிப் பாதுகாப்பு, புதிய பணி வாய்ப்புகளை உருவாக்குதல், இவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் வங்கி ஊழியர்களின் 10 சங்கங்கள், ஜனவரி 8ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலை நிறுத்தத்தில், ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள், கூட்டுறவு வங்கி, ஊரக வங்கிகள், எல்ஐசி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.