வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

உதவிப் பேராசிரியரானார் போராட்டத்தில் காயமுற்ற மாணவர்

கடந்த டிசம்பர் 15ம் தேதி தில்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த மாணவர் உதவி பேராசியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :24 டிசம்பர் 2019, 9:15 am

கடந்த டிசம்பர் 15ம் தேதி தில்லி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த மாணவர் உதவி பேராசியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 15ம் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பிஹெச்.டி மாணவர் தாரிக் என்பவரும் பங்கேற்றார். இவர் இளநிலை ஆராய்ச்சியாளர்(ஜே.ஆர்.எஃப்) மற்றும் நெட் தேர்வில் தகுதி பெற்றவர்.

இந்நிலையில், போராட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட மோதல்களின்போது தாரிக் பலத்த காயமடைந்தார். அவரது வலது கை விரல்கள் பலத்த சேதமடைந்துள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு, தொற்றுநோய் பரவாமல் காப்பாற்ற அவரது உள்ளங்கையை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவரை உதவி பேராசிரியராக நியமித்து அலிகர் பல்கலைக்கழகம் இன்று உத்தரவிட்டுள்ளது. அறிவியல் மற்றும் வேதியியல் துறையின் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து அவசர முடிவாக இது எடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

அலிகர் பல்கலை.யில் கடந்த 15ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று அது வன்முறையில் முடிந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பல்கலை சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி வி.கே.குப்தா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று பல்கலை. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி வி.கே.குப்தா இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.