கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுட்டுக் கொலை: இருவர் கைது 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :10 பிப்ரவரி 2019, 6:43 am

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

கிருஷ்நகர் சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏவான சத்யாஜித் பிஸ்வாஸ், நாடியா மாவட்டம், புல்பாரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை மாலை பங்கேற்றார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சத்யாஜித் பிஸ்வாஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த கொலை விவகாரத்தில் கடமை தவறியதாக ஹன்ஸ்காளி காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.