ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தில்லியில் ஜீன்ஸ்; கிராமப் பகுதிகளில் சேலை: பிரியங்கா குறித்து பாஜக எம்.பியின் சர்ச்சைப் பேச்சு 

பிரியங்கா காந்தி தில்லியில் ஜீன்ஸும், கிராமப் பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்று பாஜக எம்.பி ஒருவர் விமர்சித்து பேசி இருப்பது  சர்ச்சையை கிளப்பியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 3:30 pm

DIN

புது தில்லி: பிரியங்கா காந்தி தில்லியில் ஜீன்ஸும், கிராமப் பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்று பாஜக எம்.பி ஒருவர் விமர்சித்து பேசி இருப்பது  சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.  அதன்பின் உத்தர பிரதேசத்திற்கு முதன்முறையாக பிரியங்கா காந்தி திங்களன்று  சென்றார்.  அவருடன் காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் உடன் சென்றார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி தில்லியில் ஜீன்ஸும், கிராமப் பகுதிகளில் சேலையும் அணிகிறார் என்று பாஜக எம்.பி ஒருவர் விமர்சித்து பேசி இருப்பது  சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பஸ்தி தொகுதியில், பாரதிய ஜனதா கட்சி எம்.பியாக இருப்பவர் ஹரீஷ் திவிவேதி. இவர் திங்களன்று தனது தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

பிரியங்கா காந்தி தில்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் அணிகிறார்.  ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு அவர் வரும்பொழுது சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொள்கிறார்.

எங்களது கட்சிக்கோ அல்லது எனக்கோ பிரியங்கா ஒரு பெரிய விஷயமே இல்லை. ராகுல் காந்தி ஏற்கனவே தனது செயல்பாடுகளில் தோல்வி அடைந்து விட்டார்.  ரியங்காவும் தோல்வியை மிக விரைவில் தோல்வியடைவார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள்பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.