தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது...

India's Jasprit Bumrah, right, hugs teammate Sanju Samson to celebrate their win in the T20 World Cup cricket semi-final match against England in Mumbai, India, Thursday, March 5, 2026. (AP Photo/Rafiq Maqbool)

சஞ்சு சாம்சனை கட்டியணைக்கும் பும்ரா. - படம்: ஏபி

Published On :

டி20 உலக்க கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் அந்த விருதினை பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு சமர்ப்பித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக வான்கடேவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்திய அணி முதலில் பேட்டி செய்து, 20 ஓவர்களில் 253/7 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து 20 ஓவர்களில் 246/7 ரன்கள் எடுத்தது. முக்கியமான 18ஆவது ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சிறப்பாக பந்துவீசினார்.

இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதுவென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது:

எல்லாப் புகழும் பும்ராவுக்கே. உலகத் தரமான பந்துவீச்சாளர். தலைமுறைக்கு ஒருமுறைதான் அவரைப் போல ஒரு வீரர் கிடைப்பார்கள். அதைத்தான் அவர் இன்று செய்துகாட்டினார். இந்த விருதும் அவருக்குத்தான் செல்ல வேண்டும்.

இறுதிக் கட்டத்தில் நமது பந்துவீச்சாளர்கள் இப்படி பந்துவீசவில்லை எனில் நான் இங்கு நின்றிருக்க மாட்டேன்.

கடினமான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்கள் தங்களை நம்பி பந்துவீசினார்கள். அவர்களுக்குத்தான் அனைத்து பாராட்டுகளும் செல்ல வேண்டும்.

கடந்த போட்டியில் இருந்து சிறிது ஃபார்ம் எனக்குக் கிடைத்துள்ளது. எனக்கு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, அந்த ஃபார்மை பயன்படுத்த வேண்டுமென நினைத்தேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்கள் குவிக்க வேண்டும்.

எனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த நினைத்தேன். 250 ரன்களும் இங்கு சேஸ் செய்யமுடியும். இங்கிலாந்து மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

இது ஒரு நாள் போட்டியோ டெஸ்ட் போட்டியோ அல்ல; எல்லா போட்டிகளிலும் சதம் அடிக்க வேண்டியதில்லை. இந்தியாவுக்காக பங்களிப்பதில் மகிழ்ச்சி என்றார்.

Summary

Samson dedicates his Player of the Match award to once-in-a-generation Bumrah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.