பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சஞ்சு சாம்சன், ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்கள் எடுத்துள்ளது.

Sanju Samson celebrates after scoring a half-century

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ

Published On :

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் மும்பை வான்கடே திடலில் இன்று (மார்ச் 5) நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

சஞ்சு சாம்சன், ஷிவம் துபே அதிரடி; இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி சஞ்சு சாம்சன் அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அபிஷேக் சர்மா 9 ரன்களில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன் பின், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். முதல் ஓவரிலிருந்தே அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சனுடன் இணைந்த இஷான் கிஷனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இஷான் கிஷன் ஆட்டமிழந்தவுடன், கேப்டன் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிவம் துபே களமிறங்கி ஆச்சரியமளித்தார். களமிறங்கியது முதலே துபேவும் அதிடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

Story image

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசும் முயற்சியில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

அதன் பின், ஷிவம் துபே மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, துபே மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஹார்திக் பாண்டியா 12 பந்துகளில் 27 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) , திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்களும் (3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

Summary

England, playing first in the semi-final against England in the T20 World Cup, have scored runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.