210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்: பிரியங்கா பிரசாரத்தில் ராகுல் பேச்சு

தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:07 am

DIN


தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். 

உத்தரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று சாலை மார்க பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்துக்கு மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது. இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். 

இந்த பிரசாரத்தின் நடுவில் ராகுல் காந்தி, தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன் என்று கோஷமிட்டார். உடனே அந்த கூட்டத்தில் இருந்தவர்களும் திருப்பி கோஷ எழுப்பினர். இதையடுத்து பிரதமரை தாக்கி ராகுல் காந்தி பேசியதாவது, 

"தேசத்தின் பாதுகாவலர் உத்தரப் பிரதேச மக்களின் பணத்தையும், இந்திய விமானப் படை பணத்தையும் மற்றும் பலர் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டார். தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடன்!

உத்தரப் பிரதேசம் இந்தியாவின் இதயம். உத்தரப் பிரதேச பொதுச் செயலாளர்களாக பிரியங்கா மற்றும் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவை நியமித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்துக்கு நிகழும் அநீதிக்கு எதிராக சண்டையிட அவர்களிடம் தெரிவித்துள்ளேன். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சித்தாந்தம் கொண்ட அரசு அமையும் வரை நாங்கள் (பிரியங்கா, ஜோதிர்ஆதித்யா சிந்தியா, ராகுல்) ஓயமாட்டோம்" என்றார். 

காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. மக்களவைத் தேர்தலுக்கு முன் ராகுல் மற்றும் பிரியங்காவின் முதல் மாபெரும் பிரசாரமும் இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.