நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி பேட்டி  

நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன் என்று பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதில் தாக்குதல் குறித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.
நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி பேட்டி  
Published on
Updated on
1 min read

கவுஹாத்தி: நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன் என்று பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதில் தாக்குதல் குறித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சி.ஆர்.பி.எப் வீரர்களின் வாகனங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவமானது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரிய வந்தது. தற்போது தேசிய விசாரணை ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் மரணமடைந்தவர்களில் அஸ்ஸாமைச் சேர்ந்த தலைமைக் காவலர் மனேஸ்வர் பசுமத்தாரியும் ஒருவர்.  புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படையின் விமானங்கள் செவ்வாய் அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன் என்று பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதில் தாக்குதல் குறித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

மனேஸ்வர் பசுமத்தாரியின் மனைவியான சன்மதி போடோ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

இந்த பதில் தாக்குதல் குறித்து எனது உறவினர் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். உடனடியாக நான் தொலைக்காட்சியின் இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகளைப் பார்த்தேன். அப்போது நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்று கூற முடியாது. எனது கணவர் மரணமடைந்த பிறகு பிறகு என்னால் இரவில் உறங்கவே முடிவதில்லை. நான் இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன். நான் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

இந்த தாக்குதலில் உயிழந்த பல்வேறூர் வீரர்களின் குடும்பத்தினரும் இந்தியா தரப்பை பாராட்டும் அதே வேளையில், இவரைப் போன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com