இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ்: கலக்கத்தில் கர்நாடக கூட்டணி ஆட்சி! 

இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ்: கலக்கத்தில் கர்நாடக கூட்டணி ஆட்சி! 

கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று விட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது 

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று விட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது 

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) மற்றும்  காங்கிரஸ் கூட்டணி  ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்   அதிருப்தியில் உள்ள சில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவியது. இதற்கு 'ஆபரேஷன் லோட்டஸ்' என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று விட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது 
 
சுயேட்சை எம்எல்ஏ எச் நாகேஷ், கேபிஜேபி கட்சியைச் சேர்ந்த ஆர். சங்கர் ஆகியோர் தங்களின் ஆதர்வாவு வாபஸ் முடிவைக் கடிதம் மூலம் ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு தெரிவித்துள்ளனர். தற்போது இந்த இரு எம்எல்ஏக்களும் மும்பையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கையை ஆளுநர் எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் அவர்கள் இருவரும் கோரியுள்ளனர்.

இந்த் சூழல் குறித்து மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி கூறுகையில், “ கர்நாடக ஆளும் அரசுக்கு 2 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதால் எந்தக் கவலையும் இல்லை. நான் எந்த பதற்றமம் இல்லாமல் இருக்கிறேன். என்னுடைய அரசின் பலம் எனக்குத் தெரியும்” என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com