
மும்பை: மகாராஷ்டிராவின் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 6 பேர் பலியாகினர்
மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் நர்மதை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உள்ளூர் படகு சவாரி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி செவ்வாயன்று நடைபெற்ற படகு சவாரியில் போது சுமார் 60க்கு மேற்பட்டோர் ஒரே படகில் பயணம் செய்தனர். படகு ஆற்றின் ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் நீரில் தத்தளித்த 39 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.