தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை: அண்ணா ஹசாரே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சமூக ஆர்வலர் அண்ணா

News image
Updated On :19 ஜனவரி 2019, 1:06 pm

DIN


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

2014-இல் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால்,  ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  பாஜக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், மத்திய அரசை கண்டித்து காந்தியின் நினைவு தினமான வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.