
புது தில்லி: இன்னும் ஒரு வாரத்தில் ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதம் பிறக்க உள்ளது. பிப்ரவரி என்றாலே காதலர் தினத்துக்கு அடுத்து பட்ஜெட்தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
பட்ஜெட்.. மத்திய அரசு வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யவிருப்பது இடைக்கால பட்ஜெட்டாகும். விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய அரசு இந்த ஆண்டு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க. .. அல்வா பூஜையுடன் தொடங்கியது பட்ஜெட் தயாரிப்பு பணி
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி எப்படி இருக்கிறார்? அவர் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா?? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுவரை அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து மத்திய அரசு எதையும் கூறவில்லை.
உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜேட்லி, நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து விரைவாக குணமடைந்து வருவதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சக பொறுப்பு வகித்து வரும் பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.
நியூ யார்க்கில் உள்ள மருத்துவமனையில் அருண் ஜேட்லிக்குக் கடந்த செவ்வாயன்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அவர் குறைந்தது 2 வார காலமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்குள் அருண் ஜேட்லி இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வரும் இடைக்கால பட்ஜெட்டை அருண் ஜேட்லி தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.