சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஐந்து குரான்களை தானம் செய்யுங்கள்: 19 வயது பெண்ணுக்கு நீதிமன்றம் நிபந்தனை

19 வயது பெண்ணுக்கு பெயில் வழங்க, 5 குரான்களை வாங்கி தானமாக வழங்க வேண்டும் என்று விநோதமான நிபந்தனையை விதித்துள்ளது ராஞ்சி நீதிமன்றம்.

News image
Updated On :17 ஜூலை 2019, 11:15 am

19 வயது பெண்ணுக்கு பெயில் வழங்க, 5 குரான்களை வாங்கி தானமாக வழங்க வேண்டும் என்று விநோதமான நிபந்தனையை விதித்துள்ளது ராஞ்சி நீதிமன்றம்.

முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவு செய்த 19 வயது ரிச்சா பார்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க ஒப்புக் கொண்ட நீதிபதிகள் ஒரு விநோத நிபந்தனையை விதித்தார்.

அதாவது 5 குரான் புத்தகங்களை வாங்கி அதில் ஒன்றை அஞ்சுமான் குழுத் தலைவரிடம் காவல்துறை முன்னிலையில் வழங்க வேண்டும், மீதமிருக்கும் 4 புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு தானமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உடனடியாக புத்தகங்களை வாங்கி அதனை தானமாக வழங்கியதற்கான சான்றுகளை தாக்கல் செய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.

முஸ்லிம் மத நம்பிக்கைக்கு எதிரான கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதற்காக பி.காம். கல்லூரி மாணவியான பார்தி, ஜூலை 12ம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திங்கட்கிழமையன்று நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.