கும்பல் தாக்குதல் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு செக் 

நாடு முழுவதும் நடைபெறும் கும்பல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பல் தாக்குதல் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு செக் 

புது தில்லி: நாடு முழுவதும் நடைபெறும் கும்பல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பரவலாக கடந்த ஆண்டு பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணை மேற்கொண்டு,  இவை கொடூரமான செயல்கள் என்று கண்டனம் தெரிவித்தது. இத்தகைய செயல்களில் ஈடுபடும்  பசு பாதுகாவலர்களை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால் தற்போது மோடி அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் பிற மதத்தவர் மற்றும் அப்பாவிகளை 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லச் சொல்லியும் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பலதரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறி தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநல மனுவை தாக்கல் செய்தது. அதில் கும்பல் தாக்குதலை ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக்கவும், கடுமையான தண்டனையை வழங்கும் விதமாகும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com