டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கேரள இளைஞர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜூன் 2019, 9:10 am


கொச்சி: கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, எர்ணாகுளம் மாவட்டம் வடகேகர கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது 18 பேர் உயிரிழந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.