நிதி ஆயோக்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
நிதி ஆயோக்: காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் மன்மோகன் சிங் சந்திப்பு
Updated on
1 min read


புது தில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

புது தில்லியில் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெஹ்லாட், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகெல், கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, ஆறுகளை புனரமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மன்மோகன் சிங் எடுத்துக் கூறினார். மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு தொழில் முதலீடுகளைக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com