சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ மேஜர் உயிரிழப்பு 

காஷ்மீரில் திங்களன்று பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிந்தார்.

News image
Updated On :17 ஜூன் 2019, 2:51 pm

ஸ்ரீநகர்: காஷ்மீரில் திங்களன்று பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த சண்டையில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிந்தார்.

ஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம் அசாபால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார்கள். இதனால் இருதரப்புக்கும்  இடையே சண்டை வெடித்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.